திருவாரூர்: நன்னிலம் அருகே கரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் வீட்டில் வளர்த்து வந்த ஆடுகளை கறிக்காக தரகரிடம் விற்றுள்ளனர்.
இந்நிலையில் ஆட்டுடன் வளர்ந்து வந்த நாய் ஒன்று ஆட்டை பிரிய முடியாமல் அதை ஏற்றிச் சென்ற லாரியை துரத்திச் சென்றது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.