தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

100 நாள் வேலைத்திட்டத்தில் சாதி பார்த்து சம்பளம்: மக்கள் போராட்டம்

100 நாள் வேலைத்திட்டத்தில் பணிசெய்து ஒரு மாதத்தைக் கடந்தும் இதுவரை வங்கிக் கணக்கில் பணம் வரவுவைக்கவில்லை, பிற்படுத்தப்பட்டோருக்கு முதலில் வங்கிக் கணக்கில் வரவுவைப்பதும் பட்டியலினத்தவருக்குக் காலம் தாழ்த்தி வரவுவைப்பதைத் தொடர்ச்சியாகச் செய்துவரும் ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

100-நாள் வேலைத் திட்டத்தில் சம்பளம் வழங்கவில்லை கிராம மக்கள் திடீரென சாலை மறியல்
100-நாள் வேலைத் திட்டத்தில் சம்பளம் வழங்கவில்லை கிராம மக்கள் திடீரென சாலை மறியல்

By

Published : Jan 4, 2022, 2:51 PM IST

திருவாரூர்: நன்னிலம் அருகே உள்ள வேலங்குடி கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தின்போது 100 நாள் வேலைத் திட்டத்தில் (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்) பணிசெய்து ஒரு மாதத்தைக் கடந்தும் இதுவரை வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கவில்லை என்பதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

100 நாள் வேலைத் திட்டத்தில் சம்பளம் வழங்குவதில் தீண்டாமை

மேலும், இப்போராட்டத்தின்போது பிற்படுத்தப்பட்டோருக்கு முதலில் வங்கிக் கணக்கில் வரவுவைப்பதும் பட்டியலினத்தவருக்குக் காலம் தாழ்த்தி வரவுவைப்பதைத் தொடர்ச்சியாகச் செய்துவரும் ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

100 நாள் வேலைத் திட்டத்தில் சம்பளம் வழங்கவில்லை

அதன்பின்னர் இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த பேரளம் காவல் துறையினர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.

கிராம மக்கள் திடீரென சாலை மறியல்

இந்தத் திடீர் சாலை மறியல் போராட்டத்தால் காரைக்கால்-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பள்ளி செல்லும் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: தடுப்பூசி போட்டும் ஒமைக்ரான் பாதிப்பு இருந்தால் வீட்டிலேயே இருங்கள் - மா.சு அறிவுரை

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details