தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞர் பாம்பு கடித்து உயிரிழப்பு - நன்னிலம்

திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த இளைஞர் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

nannilam
nannilam

By

Published : May 4, 2022, 7:11 PM IST

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், குடவாசல் பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் (26). தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் சேல்ஸ்மேனாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கடந்த வாரம் வீட்டின் அருகே உள்ள ஒரு கீற்றுக்கொட்டகையில் அமர்ந்து நண்பர்களுக்கு விற்பனை செய்வது தொடர்பாக பேசிக்கொண்டிருந்தார். அப்போது நல்ல பாம்பு ஒன்று அந்த இளைஞரை கடித்துள்ளது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த சில நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்த மோகன்ராஜ், சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இறந்துபோன மோகன்ராஜுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சொத்து தகராறில் கொடூரம்.. அக்காவை வெட்டிக் கொன்ற தம்பி கைது

ABOUT THE AUTHOR

...view details