தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரப்பதம் பார்க்காமல் கொள்முதல் செய்ய வேண்டும் - நன்னிலம் விவசாயிகள் கோரிக்கை!

கனமழையால் 300க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் மழையில் நனைந்து சேதமடைந்த நிலையில் ஈரப்பதம் பார்க்காமல் கொள்முதல் செய்ய நன்னிலம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

nannilam rain paddy damage farmers request
nannilam rain paddy damage farmers request

By

Published : Jul 27, 2021, 4:05 PM IST

திருவாரூர் : நன்னிலம் மற்றுஜ்ம் அதன் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் குறுவை சாகுபடியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களாக பெய்துவரும் கனமழையால் நெற்பயிர்கள் வயலிலேயே சாய்ந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

விவசாயிகள் கோரிக்கை
குறிப்பாக மாங்குடி, குருங்குளம், பூந்தோட்டம், கொல்லாபுரம் உள்ளிட்ட அதன் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் சுமார் 300க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் மழையில் சாய்ந்து சேதமடைந்துள்ளதால் ஈரப்பதம் அதிகம் காணப்படுகிறது. இதனால், நெல் மூட்டைகளை நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு சென்றால் ஈரப்பதம் அதிகம் இருப்பதாக காரணம் காட்டி அலைக்கழிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

நெற்பயிர்கள் வயலிலேயே சாய்ந்து சேதம்

எனவே விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஈரப்பதம் பார்க்காமல் அனைத்து நெல் மூட்டைகளையும் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டன ஆர்பாட்டம்

ABOUT THE AUTHOR

...view details