திருவாரூர்:தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து விடிய விடிய கனமழை பெய்தது.
குறிப்பாக நன்னிலம் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும், விடிய விடிய பெய்த மழையால் திருக்கொட்டாரம், கமுகக்குடி, பேரளம் கொல்லுமாங்குடி பாவட்டக்குடி, சங்கமங்கலம், பழையாறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நெற் பயிர்கள் முழுவதும் மழை நீரில் மூழ்கியது.