திருவாரூர்: நன்னிலம் அருகே மணியாங்குடி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரது மகள் மதுபாஷினி (18). இவர் திருச்சியில் பி.எஸ்சி. நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார்.
மதுபாஷினி தனது பெற்றோரிடம், தனக்கு ஆங்கிலம் படிக்கத் தெரியவில்லை என்றும், அதனால் தான் கல்லூரிக்குப் போகவில்லை எனவும் முறையிட்டுள்ளார். பெற்றோர் படிக்கச் சொல்லி அறிவுரை வழங்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மதுபாஷினி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலறிந்து வந்த நன்னிலம் காவல் துறையினர் மாணவியின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலையில் உயிரிழப்பு - திருவாரூர்
நன்னிலம் அருகே நர்சிங் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நர்சிங் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை
இந்தச் சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: காவலாளி குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்குக - உயர் நீதிமன்ற மதுரை கிளை