தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாத நாட்டாறு! - திருவாரூர் தூர்வாரப்படாத நாட்டாறு

திருவாரூர் : நன்னிலம் அருகே நாட்டாறு வாய்க்கால் சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாததால் விவசாயம் செய்த முடியாத நிலை உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

nannilam nattaru river issue
nannilam nattaru river issue

By

Published : Jun 8, 2021, 12:37 PM IST

குறுவை சாகுபடிக்காக ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இதையடுத்து மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்குத் தண்ணீர் திறப்பதற்குள் ஆறுகள், ஏரிகள், வாய்க்கால்களை தூர்வாரி முடிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில்,திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே கொல்லுமாங்குடியிலிருந்து காரைக்கால் நோக்கி செல்லும் நாட்டாறு கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாததால் அதன் பாசனத்தை நம்பி வாழும் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய விவசாயிகள்,”கடந்த ஆண்டு குடிமராமத்து பணிகள் மாவட்டம் முழுவதும் நடைபெற்றது. ஆனால் கொல்லுமாங்குடியில் ஓடக்கூடிய நாட்டாறு தூர்வாரப்படவில்லை. இதனை நம்பி சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற முடியாமல் தவித்து வருகிறோம்.

குறிப்பாக கொல்லுமாங்குடி, பாவட்டக்குடி, மாத்தூர், திருக்கொட்டாரம், பழையாறு, மாத்தூர்,கமுகக்குடி, உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சிறு குறு விவசாயிகள் அதிக அளவில் விவசாயம் செய்து வருகின்றோம். நாட்டாறு தூர்வாரப்படாததால் புதர்கள் மண்டி சிறிய வாய்க்கால் போல் மாறி வரும் அவலம் ஏற்பட்டுள்ளது.

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாத நாட்டாறு
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பொதுப்பணித்துறை அலுவலர்கள் நாட்டாற்றை முழுமையாக தூர்வாரி, ஆற்றின் குறுக்கே உள்ள தடுப்பணைகளையும் சரிசெய்து தர வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர். இதையும் படிங்க:

நியாய விலைக்கடைகள் மீண்டும் செயல்படும் - தமிழ்நாடு அரசு

ABOUT THE AUTHOR

...view details