திருவாரூர்: வலங்கைமான் அருகே உள்ள நரிக்குடி கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவருடைய மனைவி ஜோதிலட்சுமி (42). விவசாய தொழிலாளியான இவர் தனது வீட்டில் ஆடு வளர்த்துவருகிறார்.
இந்நிலையில் இரவு திடீரென ஆடுகள் சத்தம் போட்டதால், ஜோதிலட்சுமி ஆடுகள் கட்டப்பட்டிருந்த பகுதிக்குச் சென்று பார்த்தபோது மூன்று பேர் இரண்டு ஆடுகளைத் திருடி மோட்டார் சைக்கிளில் தப்பிச்செல்ல முயன்றனர்.
ஆடு திருடிய சிறுவர்கள் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் ஒப்படைப்பு இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து ஆடு திருடியவர்களைப் பிடித்து வலங்கைமான் காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.
சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் ஒப்படைப்பு
இச்சம்பவம் குறித்து ஜோதிலட்சுமி வலங்கைமான் காவல் துறையிடம் கொடுத்த புகாரின்பேரில் மூன்று சிறுவர்களிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் விசாரணையில் அவர்கள் மூன்று பேரும் 18 வயதுக்குள்பட்டவர்கள் எனத் தெரியவந்தது. இதையடுத்து மூன்று சிறுவர்களைக் கைதுசெய்த காவல் துறையினர் வலங்கைமான் நீதிமன்ற உத்தரவின்படி திருவாரூர் அரசு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: 'கரோனா நிவாரண நிதி கொடுக்க சென்ற பெண் - நெகிழ்ச்சியை ஏற்படுத்திய ஆட்சியர்'