திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள திருமிச்சூர் மேகநாதர் கோயில் லலிதா சகஸ்ரநாமம் தோன்றிய திருத்தலம் அகத்தியர் லலிதா சகஸ்ர நாமத்தின் திருமிச்சூர் லலிதாம்பிகையை வழிபட்டு லலிதா நவரத்தின மாலை என்ற பாடலை இயற்றி அர்ப்பணித்த இடம் என்று கூறப்படுகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இத்தலத்தில், கரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பூரண நலம் பெற வேண்டி அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் சி.பி.ஜி அன்பழகன் தலைமையில் 1008 பால் குடத்தினை அதிமுகவினர் பேரளம் மாரியம்மன் கோயிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள லலிதாம்பிகை அம்மன் ஆலயம் வரை நடந்து சென்று அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடத்தினர்.