தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தடுப்பணைகளை சீரமைக்காமல் வர்ணம் தீட்டினால் போதுமா? வேதனையில் விவசாயிகள் - திருவாரூர் மாவட்டச் செய்திகள்

நன்னிலம் பகுதியில் தடுப்பணைகள், ரெகுலேட்டர்களை சீரமைக்காமல் வர்ணம் மட்டும் பூசிவருவதால் அப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

nannilam  farmrs request reconstracte the regulator
தடுப்பணைகளை சீரமைக்காமல் வர்ணம் தீட்டினால் போதுமா? வேதனையில் விவசாயிகள்

By

Published : Jun 16, 2021, 3:08 PM IST

திருவாரூர்:தமிழ்நாட்டில் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் விவசாயப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய ஆறுகள் அதன் கிளைகள் முழுவதும் தூர்வாரும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், நன்னிலம் அருகே பல்வேறு இடங்களில் ஆறுகளின் குறுக்கே பிரிந்துசெல்லக்கூடிய ரெகுலேட்டர், தடுப்பணைகளை பொதுப்பணித்துறை அலுவர்கள் முறையாக சீரமைக்காமல் வர்ணம் தீட்டி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும், பல்வேறு ஆறுகளில் இருந்து பிரிந்து செல்லக்கூடிய ரெகுலேட்டர், தடுப்பணைகளை முழுமையாக சீரமைக்கப்படாததால், உரிய நேரத்திற்கு விவசாயிகளுக்கு தண்ணீர் சென்று பாசனவசதி பெறுவதில் சிரமம் ஏற்படும் என்பதால், உடனடியாக தடுப்பணை, ரெகுலேட்டர்களை சீரமைத்துக் கொடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:நன்னிலம் மதகு, தடுப்பணைகளை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details