திருவாரூர்:நன்னிலம் அருகே உள்ளது கமுகக்குடி கிராமம். இங்கு ஓஎன்ஜிசி நிறுவனத்தின் மூலம் விளைநிலத்தில் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்றுவந்தன.
கடந்த ஒரு மாத காலமாகப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், குழாய் பதிப்பதற்காகத் தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாமல் உள்ளன. இதனால் பாசன வாய்க்கால் வழியாகச் செல்லும் நீர் முழுவதும், வேளாம் நிலத்திற்குள் வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
விளைநிலங்களில் தேங்கும் நீர் இது வேளாண்மைக்குப் பெரும் இடையூறாக உள்ளது. பலமுறை ஓஎன்ஜிசி அலுவலர்களுக்குத் தகவல் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. உழவர்களின் இக்கட்டான சூழலைப் புரிந்துகொண்டு, மாவட்ட நிர்வாகம் விரைந்து ஓஎன்ஜிசி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என உழவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: குழாய் இங்கே தண்ணீர் எங்கே? ஆத்திரமடைந்த கிராம மக்கள்!