திருவாரூர் மாவட்டம் நன்னிலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 50,000க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சம்பா தாளடி பணிகள் நடந்துவந்த நிலையில் தற்போது அறுவடை பணிகள் தொடங்கி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில் வேளாண் துறை சார்பில் வழங்கப்படும் நெல் அறுவடை இயந்திரங்கள் கிடைக்காததால் தனியார் அறுவடை இயந்திரங்களை பெற்று விவசாயிகள் அறுவடை பணியில் ஈடுபடும் நிலையில் தனியார் அறுவடை இயந்திரங்கள் தட்டுப்பாடு அதிகம் இருப்பதால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாததால் நெல் மணிகள் முழுவதுமாக வயலிலேயே சாய்ந்து கருகி பதறாக மாறி வருவதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.