திருவாரூர்: நன்னிலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 17 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பருத்திச் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்த பருத்திச் செடிகள் அனைத்தும் சேதமடைந்து காணப்படுகின்றன.
இதுகுறித்து பருத்தி விவசாயிகள் பேசுகையில், "இந்த ஆண்டு கோடை சாகுபடியாக அதிகளவு விவசாயிகள் பருத்திச் சாகுபடியில் ஈடுபட்டிருந்தனர். தற்போது அறுவடை பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன. இந்நிலையில் இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் பருத்திச் செடிகள் சேதமடைந்துள்ளன.
நிறம் மாறலால் கொள்முதலுக்கு மறுப்பு
மேலும் அதிக ஈரப்பதத்தால் பூச்சி, நோய்த் தாக்குதலுக்குள்ளாகி, அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்த பருத்தி அனைத்தும் மஞ்சள் நிறமாக மாறி வருகிறது. அவற்றை அறுவடை செய்து பருத்தி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கொடுத்தால், கொள்முதல் செய்யாமல் திருப்பி அனுப்புகின்றனர்.