தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மணவாளநல்லூர் ஊராட்சித் தேர்தல்: திமுக ஆதரவு வேட்பாளர் தோல்வி - அதிமுக ஆதரவுபெற்ற வேட்பாளர் வெற்றி

நன்னிலம் அருகேவுள்ள மணவாளநல்லூர் ஊராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட அதிமுக ஆதரவு வேட்பாளர் பிரபாகரனிடம் திமுக ஆதரவுபெற்ற வேட்பாளர் முகமது ஜர்ஜித் 270 வாக்குகள் குறைவாகப் பெற்று தோல்வியைத் தழுவினார்.

மணவாளநல்லூர் ஊராட்சிமன்றத் தேர்தல்
மணவாளநல்லூர் ஊராட்சிமன்றத் தேர்தல்

By

Published : Oct 13, 2021, 8:46 AM IST

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா மணவாளநல்லூர் திமுக ஊராட்சி மன்றத் தலைவர் கணேசன் இறந்த பிறகு அவரது மகன் எம்.ஜி. பிரபாகரன் அதிமுக ஆதரவுடன் ஊராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டார்.

இவரை எதிர்த்து திமுக ஆதரவுடன் முகமது ஜர்ஜித், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ஆதரவுடன் முகமது ஃபைசல் ஆகிய மூன்று பேரும் போட்டியிட்டனர். இந்த ஊராட்சியில் மொத்தம் இரண்டாயிரத்து 145 வாக்குகள் உள்ள நிலையில் கடந்த 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

திமுக ஆதரவு பெற்ற வேட்பாளர் தோல்வி

இந்நிலையில் நேற்று (அக்டோபர் 12) திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. நேற்று காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்கு எண்ணிக்கை நிறைவுபெற்றது.

இந்த நிலையில், திமுக ஆதரவுபெற்ற வேட்பாளர் முகமது ஜர்ஜித் தோல்வியைத் தழுவினார். இவரை விட 270 வாக்குகள் அதிகம் பெற்ற எம்.ஜி. பிரபாகரனிடம் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இதையும் படிங்க:உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 51 பேர் வெற்றி

ABOUT THE AUTHOR

...view details