தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நன்னிலம் பகுதிகளில் பருத்தி சாகுபடிக்கு உர தட்டுப்பாடு - Tiruvarur, Nannilam farmers

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், நன்னிலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உரத் தட்டுப்பாடு நிலவி வருவதால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம் உரிய  நேரத்தில் இடுபொருள்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாய சங்கம் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்னிலம் பகுதிகளில் பருத்தி சாகுபடிக்கு உர தட்டுப்பாடு நிலவி விவசாயிகள் வேதனை
நன்னிலம் பகுதிகளில் பருத்தி சாகுபடிக்கு உர தட்டுப்பாடு நிலவி விவசாயிகள் வேதனை

By

Published : Apr 4, 2021, 4:14 PM IST

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சம்பா தாளடி அறுவடை பணிகள் முடிவுற்று, தற்போது பருத்தி சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நன்னிலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில், விவசாயிகள் பருத்தி சாகுபடியில் ஈடுபட்டுவரும் நிலையில், தற்போது உரத் தட்டுப்பாடு நிலவி வருவதால் விவசாயிகள் பருத்திக்கு உரம் வைக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

நன்னிலம் பகுதிகளில் பருத்தி சாகுபடிக்கு உர தட்டுப்பாடு குறித்து ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில் பேசிய நன்னிலம் விவசாய சங்க மாவட்ட செயலாளர் தியாகு ரஜினிகாந்து
இது குறித்து ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில் பேசிய நன்னிலம் விவசாய சங்க மாவட்ட செயலாளர் தியாகு கூறுகையில்: “கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக நெல் பயிர்கள், மழை நீரில் மூழ்கி சேதமைடைந்ததால் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்து வந்தோம். பருத்தி சாகுபடியிலாவது அதிக மகசூல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பருத்தி சாகுபடியில் ஈடுபட்டுள்ள நிலையில், தற்போது பருத்தி வளர்ந்து வந்துள்ளதால் இடுபொருளான யூரியா, பொட்டாசியம் தட்டுப்பாடு நிலவிவருவதால் உரிய நேரத்தில் உரம் இட முடியாமல் பருத்தி கருகி வருகின்றன.

தற்போது தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், வெளியிலிருந்து உரங்களை கொள்முதல் செய்ய முடியவில்லை என கடை உரிமையாளர்கள் கூறி வருகின்றனர்.

இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம் உரிய நேரத்தில் இடுபொருள்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்' என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: 'விவசாயிகளின் கடன்வாங்கும் தகுதி மேம்படுமா?'

ABOUT THE AUTHOR

...view details