திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே இஞ்சிகுடி பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜ் (40). இவர் நேற்று (மே.5) பூந்தோட்டத்தில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்காக இஞ்சிகுடி நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது பூந்தோட்டம் கடைத்தெரு அருகே கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், நிலை தடுமாறி மின்கம்பத்தில் மோதியதில் மின்கம்பம் சாய்ந்தது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட தர்மராஜ் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இந்த காட்சி அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது. தற்போது இந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மின்கம்பத்தில் மோதிய இருசக்கர வாகனம்மின்கம்பத்தில் மோதிய இருசக்கர வாகனம் இதையும் படிங்க: ஒரே மருத்துவமனையில் குவியாதீர்கள் - ‘104’ என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள்!