தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒன்றரை வயது குழந்தையை காப்பாற்றிய ரோந்து பணி காவலர்கள்! - திருவாரூர் குழந்தை மீட்பு

நன்னிலம் அருகே உயிருக்கு போராடிய ஒன்றரை வயது குழந்தையை காப்பாற்றிய ரோந்து பணி காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் பாராட்டியுள்ளார்.

nannilam-baby-epilepsy-petrol-police-help
nannilam-baby-epilepsy-petrol-police-help

By

Published : Jun 11, 2021, 12:53 PM IST

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள சன்னாநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி- மெல்மா தம்பதியினர்.இவர்களது ஒன்றரை வயது குழந்தை சுகன்யாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் தூக்கி சென்றுள்ளனர்.

சன்னாநல்லூர் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது இருசக்கர வாகனம் பழுது ஏற்பட்டு பாதியிலேயே நின்று விட்டது. இந்நிலையில், திடீரென குழந்தைக்கு வலிப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலைக்கு சென்றுள்ளது.

ஊரடங்கு நேரத்தில் ஆட்டோ, கார் எதுவும் இல்லாத நிலையில் இருவரும் தவித்து வந்துள்ளனர்.அப்போது அங்கு ரோந்து வந்த காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வராஜ், மற்றும் காவல்துறையினர் உடனடியாக ரோந்து வாகனத்தில் குழந்தையை அழைத்துக்கொண்டு நன்னிலம் தனியார் மருத்துவமனையில் கொண்டு சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.

குழந்தையை காப்பாற்றிய ரோந்து பணி காவலர்கள்
அப்போது சிகிச்சை அளித்த மருத்துவர் சரியான நேரத்தில் குழந்தையை கொண்டு வந்ததால் காப்பாற்ற முடிந்தது என கூறியுள்ளார்.இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் ரோந்து காவல்துறையினரை பாராட்டியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details