திருவாரூர் மாவட்டம் நல்லப்பா நகரில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் இரண்டு நாள்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக, பாதள சாக்கடை தொட்டியில் உடைப்பு ஏற்பட்டு தெருக்களில் சாக்கடை நீர் வழிந்து ஓடுகிறது. இதனால், பொது மக்கள் சாலையில் நடந்துச் செல்ல முடியாத நிலை உள்ளதாக கூறப்படுகிறது.
நல்லப்பா நகரில் டெங்கு பரவும் அபாயம்... கழிவு நீரை அகற்ற கோரிக்கை! - nallapa nagar drainage water issue
திருவாரூர்: நல்லப்பா நகரில் பாதாள சாக்கடை தொட்டியில் உடைப்பு ஏற்பட்டு தேங்கி நிற்கும் நீரால் டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
திருவாரூர்
மேலும், இந்த சாக்கடை கழிவு நீரால் கொசு உற்பத்தி அதிகமாகி மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக திருவாரூர் நகராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து கழிவுநீரை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.