மயிலாடுதுறை மாவட்டத்தில் 80 இடங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. இவற்றில் தினசரி சராசரியாக 2 ஆயிரம் நெல் மூட்டைகளுக்கு மேல் விற்பனைக்காக கொண்டுவரப்படுகின்றன. ஆனால், 800 மூட்டைகள் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
கொள்முதலைவிட வரத்து அதிகளவில் உள்ளதால், கூடுதலாக கொண்டுவரப்படும் நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்திலேயே விவசாயிகள் அடுக்கிவைத்து ஒரு மாதத்திற்கும் மேலாக காத்திருக்கின்றனர். நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு இதுவரை 1.25 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் கிசான் திட்டம்: காதில் பூ சுற்றும் அரசை கண்டித்து விவசாயிகள் நூதன போராட்டம்
இதில் 25 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் கிடங்கிற்கு கொண்டு செல்லப்படாமல், கொள்முதல் நிலையங்களிலேயே அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்த நெல்லை கொள்முதல் செய்வதற்கு ஒரு மாதமாக காலதாமதம் ஏற்பட்டுவந்தது. இச்சூழலில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அனைத்தும் இன்று முதல் முன்னறிவிப்பின்றி மூடப்பட்டது.
30ஆயிரம் மெட்ரிக் டன் நெல் தேக்கம்! விவசாயிகள் வேதனை! அக்டோபர் மாதம் 3ஆம் தேதிக்கு பின்னரே கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என அலுவலர்கள் தெரிவித்ததால், ஒரு மாதத்திற்கும் மேலாக நெல் மூட்டைகளை வைத்துக்கொண்டு காத்திருக்கும் விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர். 30ஆயிரம் மெட்ரிக் டன்னுக்கு மேலாக விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்து வைத்துள்ள நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையத்திலேயே கொள்முதல் செய்யப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.