திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரை EIA 2020 திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
EIA 2020 சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்! - திருவாரூர் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்
திருவாரூர்: மன்னார்குடியில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு EIA சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Thiruvarur Naam Tamilar Party protest
அப்போது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு EIA 2020 திட்டத்தை திரும்பப் பெற வேண்டும், தேசிய மீன்வளக்கொள்கை மற்றும் தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்கு முறை சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும், தேசிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும், இட ஒதுக்கீடு கொள்கையில் மக்கள் விரோத போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.