தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’மக்கள் விரோத திட்டங்களுக்கு எனது கட்சி ஒருபோதும் ஆதரவளிக்காது’ - ஜி.கே. வாசன் - My party will never support Hostile programs - GK Vasan

திருவாரூர்: ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட மக்களுக்கு எதிரான எந்தத் திட்டங்களுக்கும் தனது கட்சி ஆதரவு தெரிவிக்காது என தமாகா கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

GK VASAN

By

Published : Oct 18, 2019, 7:11 PM IST

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகைதந்த தமாகா தலைவர் ஜி.கே. வாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் குறித்து தொடர்ந்து சர்ச்சைக்குரிய செய்திகள் வந்துகொண்டேயிருக்கிறது. இதுபோன்ற தவறான முறைகேடுகள் வரும் நாள்களில் எந்தத் தேர்விலும் நடைபெறாமலிருக்க மத்திய அரசு அத்துறையுடன் கலந்துபேசி முறைகேடான கோட்பாடுகளை கொடுத்து அதை முறையாக கடைப்பிடிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

திருவள்ளூர் மக்களவை உறுப்பினர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தபோது


தொடர்ந்து பேசிய அவர், நதி நீர் இணைப்பு குறித்து கேரள அரசோடு தமிழ்நாடு அரசு குழுக்கள் அமைத்து செயல்படுவது நல்ல தீர்வாகும் என்றார். எதிர்க்கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் தவறான வழிகளிலேயே மக்களை ஏமாற்றி வாக்குகளை வாங்க நினைப்பது கண்டனத்துக்குரியது என சொன்ன அவர், அதனாலேயே தேர்தல் நேரங்களில் வாக்களிக்க மக்களுக்கு பணப்பட்டுவாடா சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டிருப்பதாகக் கூறினார்.

ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட மக்களுக்கு எதிரான எந்தத் திட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்த தமாகா ஒருபோதும் ஆதரவளிக்காது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:இடைத்தேர்தல் பரப்புரை நாளையுடன் நிறைவு - சத்யபிரத சாகு

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details