திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டையில் பழமையான, இஸ்லாமியர்களின் புனிதத்தலமாக விளங்ககூடிய தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா வெகு விமர்சையாக நடைபெறும். அந்தவகையில், இந்த ஆண்டும் தர்காவின் 718 ஆம் ஆண்டு கந்தூரி விழா தர்காவின் முதன்மை அறங்காவலர் பாக்கர் அலி சாஹீப் தலைமையில் நேற்று முன் தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்நிகழ்ச்சிகாக காலை முதலே சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன. மாலையில் புனித கொடியானது பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வைக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இவ்விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.
இந்நிகழ்ச்சியின் போது அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை தலைமையில் நூறுக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த பெரிய கந்தூரி விழா 9 தினங்களுக்கு நடைபெறும்.