திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நகராட்சிக்குச் சொந்தமான கடைகளின் வாடகை பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து மன்னார்குடி வர்த்தக சங்கம் சார்பில் கண்டனப் பேரணி நடைபெற்றது.
இதில் ஹோட்டல் உரிமையாளர்கள், சுமைதூக்கும் தொழிலாளர்கள், மருந்து வணிகர்கள் தையல் தொழிலாளர்கள் என சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தங்கள் கடைகளை அடைத்து மன்னார்குடி பெரியார் சிலையிலிருந்து நகராட்சி அலுவலகம் வரை பேரணியாகச் சென்றனர். மேலும் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.