தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தெருவில் சுற்றித் திரியும் மாடுகள் சிறைப்பிடிப்பு - உரிமையாளர்களுக்கு நகராட்சி நிர்வாகம் அபராதம்! - Prison capture of cows roaming around the city of Thirvarur

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி நகரப் பகுதிகளில் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாகச் சாலையில் சுற்றித்திரிந்த 25க்கும் மேற்பட்ட மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ. 1000 அபராதத்தை நகராட்சி நிர்வாகம் விதித்தது.

தெருவில் சுற்றித் திரிந்த மாடுகளைச் சிறை பிடித்த நகராட்சி நிர்வாகம்

By

Published : Nov 13, 2019, 9:37 PM IST

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட நெடுஞ்சாலைகள், நகரக் கிராம சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாகவும், நடந்து செல்லும் பெண்கள், பள்ளிக் குழந்தைகள், முதியோர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலும் சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிகின்றன. மேலும் இரவு நேரத்தில் சாலைகளில் மாடுகள் படுத்து இருப்பதால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் அவல நிலையும் ஏற்படுகிறது.

இதனால், திருத்துறைப்பூண்டி நகராட்சி நிர்வாகம் சார்பில் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாகச் சாலையில் சுற்றித் திரிந்த 25க்கும் மேற்பட்ட மாடுகளைச் சிறை பிடித்தனர். அதன் உரிமையாளர்களுக்கு ரூ. 1000 அபராதமும் விதித்தனர்.

தெருவில் சுற்றித் திரிந்த மாடுகளைச் சிறைப்பிடித்த நகராட்சி நிர்வாகம்

எனவே, மீண்டும் சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிந்தால், அதன் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திருத்துறைப்பூண்டி நகராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதையும் படிங்க: அட்டகாசம் செய்யும் யானைகள்! அச்சத்தில் மலை கிராம மக்கள்!

For All Latest Updates

TAGGED:

Penalty

ABOUT THE AUTHOR

...view details