தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மன்னார்குடி அருகே தாய் தன் மூன்று குழந்தைகளுடன் தற்கொலை முயற்சி! - திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி

திருவாரூரில் தனது மூன்று குழந்தைகளுடன் தாய் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

மன்னார்குடி அருகே தாய் முன்று குழந்ததைகளுடன் தற்கொலை முயற்சி
மன்னார்குடி அருகே தாய் முன்று குழந்ததைகளுடன் தற்கொலை முயற்சி

By

Published : Jul 22, 2022, 8:43 AM IST

திருவாரூர்:திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்த மேலவாசல் ஆற்றங்கரை கிராமத்தைச்சேர்ந்தவர் விவேக் (35). இவரது மனைவி சத்யா (27). இவர்களுக்குத் திருமணமாகி ஆறு ஆண்கள் ஆன நிலையில் 3 வயதுடைய ஆண் குழந்தையும்; 8 மாத இரட்டைப்பெண் குழந்தைகளும் உள்ளனர்.

விவேக் மன்னார்குடி ரயில் நிலையத்தில் கேட் கீப்பராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில வாரமாகத் தொடர்ந்து இரவு நேரப்பணிக்குச் சென்று வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஜூலை 20அன்று இரவு விவேக் வழக்கம் போல் இரவு நேரப்பணிக்குச்சென்று விட்டார். சத்யா மூன்று குழந்தைகளுடன் வீட்டில் இருந்தார். அதிகாலை சத்யா வீட்டில் இருந்த சூட கட்டிகளை தண்ணீரில் கலந்து தூங்கி கொண்டிருந்த பிள்ளைகளை எழுப்பி, அவர்களுக்கும் கொடுத்துவிட்டு தானும் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

இந்தத் தகவலை கணவருக்கு போனில் கூறினார். அதிர்ச்சியடைந்த கணவர் வீட்டிற்கு வந்து மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை மீட்டு மன்னார்குடி அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு வந்தார். அங்கு அவர்களுக்கு முதல் உதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து மன்னார்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவனிடம் ஏற்பட்ட சிறு பிரச்னை காரணமாக மனைவி, தன் மூன்று குழந்தைகளுடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலையை கைவிடுங்கள்:சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 அல்லது சினேகா உதவி எண்ணை அழையுங்கள். சினேகா தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 044-24640050.

இதையும் படிங்க:சொத்தை அபகரித்து கொலை மிரட்டல்; ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா அடாவடி - பாதிக்கப்பட்டவர் புகார் மனு!

ABOUT THE AUTHOR

...view details