தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 25, 2019, 6:10 PM IST

ETV Bharat / state

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி - ஆட்சியரிடம் மனு!

திருவாரூர் : நண்பர்களிடம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை வாங்கி ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்ககோரி பாதிக்கப்பட்ட இளைஞர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

money_cheating_

திருவாரூர் மாவட்டம் ராஜகோபாலபுரத்தைச் சேர்ந்தவர் விஜயேந்திரன். அவர் தன் சகநண்பர்களிடமும், சுற்றுவட்டார பகுதியில் உள்ள இளைஞர்களிடமும் தான் வெளிநாட்டில் வேலை வாங்கி தரும் தொழில் செய்து வருவதாகக் கூறி பதினைந்துக்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து 30 லட்சம் வரை பணத்தை பெற்றுக்கொண்டு தற்போது தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பணத்தை பறிகொடுத்த இளைஞர்கள் பணத்தை திரும்ப கேட்டதற்கு தனக்கு அரசியல் செல்வாக்கு உள்ளதாகவும், தொடர்ந்து பணத்தை கேட்டு தொந்தரவு செய்தால் கூலிப்படை வைத்து கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியதாக பாதிக்கப்பட்ட இளைஞர்கள் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட இளைஞர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு!

ஆனால், இதுவரை மனு குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்த்திடம் தங்களை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பணத்தை வாங்கி ஏமாற்றியதுடன், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி வரும் விஜயேந்திரன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளித்தனர்.

இதையும் படிங்க:இருதரப்பினரிடையே மோதல் - 8 மாதத்திற்குப் பின் தரிசனம் வழங்கிய சாமி!

ABOUT THE AUTHOR

...view details