தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய எம்எல்ஏ பூண்டி கலைவாணன் - பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

திருவாரூர்: உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கலைவாணன் வழங்கினார்.

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

By

Published : Jun 3, 2021, 7:25 PM IST

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் திருவாரூர் சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கலைவாணன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அவர், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற புதிய துறையை உருவாக்கி அதற்கென சிறப்பு அலுவலர்களை நியமித்தார்.

திருவாரூர் மாவட்டத்தில் இன்று வரை 7,711 மனுக்கள் பெறப்பட்டு முதற்கட்டமாக 168 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன" என்றார்.

இந்நிகழ்வில் திட்ட இயக்குநர் தெய்வநாயகி, மாவட்ட சமூக பாதுகாப்பு தனித் துணை ஆட்சியர் கண்மணி, திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: பொது இடத்தில் ஆபாச சொற்கள்: காவலரின் காணொலி வைரல்

ABOUT THE AUTHOR

...view details