திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் பிறந்தநாளை (மார்ச் 3) முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் இனிப்புகள் வழங்கியும் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் தொடர்ந்து கொண்டாடிவருகின்றனர்.
அதனையொட்டி திருவாரூரில் திமுக இளைஞரணி துணை செயலாளர் ரஜினிசின்னா தலைமையில், விஜயபுரம் அரசு மருத்துவமனையில் மார்ச் 1ஆம் தேதி பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.