ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். ஆனால், பொதுமக்களின் நலனுக்காக வீதியில் இறங்கி கரோனாவை விரட்டும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் அவர்கள் சேவைகளை பாராட்டும் விதமாகவும் திருவாரூர் சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கலைவாணன், நகராட்சி ஊழியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம், கையுறை உள்ளிட்டவைகளை வழங்கினார். பின்னர், அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு சென்று, கடையின் உரிமையாளர்களுக்கும் முகக்கவசங்களை வழங்கினார்.
தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ! - திருவாரூரில் தூய்மை காவலர்களுக்கு முகக்கவசங்கள் வழங்கிய திமுக எம்எல்ஏ
திருவாரூர்: கரோனா வைரஸ் தாக்குதலை தடுக்க தூய்மை பணியில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களுக்கு திமுக சட்டப்பேரவை உறுப்பினர் முகக்கவசங்களை வழங்கினார்.
முகக்கவசங்கள் வழங்கிய திமுக சட்டப்பேரவை உறுப்பினர்
இதையும் படிங்க: தூய்மை பணியாளர்களுக்கு பாஜக பாத பூஜை
TAGGED:
Thiruvarur district news