தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குளிர்பானத்தில் மயக்க மருந்து; சிறுமியை வன்புணர்வு செய்த இளைஞர்கள் - thiruvaur 16 age minor girl raped

திருவாரூர்: 16 வயது சிறுமியை மூன்று இளைஞர்கள் தொடர்ந்து நான்கு மாதங்களாகக் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துள்ள கொடூரம் அரங்கேறியுள்ளது.

minor girl
minor girl

By

Published : Mar 13, 2020, 12:45 PM IST

திருவாரூர் மாவட்டம் குன்னூர் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை மூன்று இளைஞர்கள் தொடர்ந்து நான்கு மாதங்களாக பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.

திருமணம் செய்து கொள்வதாக சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கார்த்திக் என்ற இளைஞர் சிறுமியிடம் பழகிவந்துள்ளார். பின்னர் ஒருநாள் அச்சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்து, பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார். இதனைத் தெரிந்துகொண்ட ஜான்சனின் நண்பர்களான கார்த்திக், விஸ்வராஜ் ஆகிய இருவரும் சிறுமியைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டி, இவர்கள் மூன்று பேரும் தொடர்ந்து நான்கு மாத காலமாக, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்து அச்சிறுமியை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.

இந்நிலையில், சிறுமிக்கு உடல் நிலை மிகவும் மோசம் அடைந்ததையடுத்து, அவரது பெற்றோர் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால், சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகக்கூறி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு திருத்துறைப்பூண்டி மருத்துவமனை தெரிவித்துள்ளது.

பின்னர் நேற்று மாலை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்தபோது, தனக்கு நேர்ந்த இந்தக் கொடுமையை தன் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கார்த்திக் கைது செய்யப்பட்டுள்ளார். ஜான்சன், விஸ்வராஜ் இருவரும் தற்போது தலைமறைவாகிவிட்டனர்.

கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக்

கூட்டுப் பாலியல் வன்கொடுமை சட்டம், சிறுமியைத் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றுதல், உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தலைமறைவாக உள்ள மற்ற இருவரையும் காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க:மகாராஷ்டிராவில் இளம்பெண் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை

ABOUT THE AUTHOR

...view details