திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள நெடும்பலம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பாஸ்கர், ஒரு ஊராட்சியில் ஆயிரம் மரக்கன்றுகள் வீதம், 32 ஊராட்சிகளில் 32 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியினை மேற்கொண்டுள்ளார்.
இப்பணியை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தொடங்கிவைக்கும் விதமாக நேற்று (ஆகஸ்ட் 21) அப்பகுதியில் தென்னை மரக்கன்றுகளை நட்டு தொடங்கிவைத்தார். பின்பு, தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள், அரிசி உள்ளிட்ட பொருள்களை வழங்கினார்.