தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதிய கல்விக் கொள்கை: ஆய்வு செய்த பின் முடிவை அறிவிப்போம் - அமைச்சர் காமராஜ்! - We will announce the result after review

திருவாரூர்: மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து தமிழ்நாடு அரசு ஆய்வு செய்த பின் தனது முடிவை அறிவிக்கும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

minister kamaraj
minister kamaraj

By

Published : Aug 1, 2020, 8:41 PM IST

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கரோனா தடுப்பு மருத்துவ முகாமை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, "திருவாரூர் மாவட்டத்தில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மூலம் அரசு நிர்ணயித்த 28 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதலை கடந்த சில தினங்களில் 30 லட்சம் மெட்ரிக் டன் என்ற நிலையை அடையும். இதில் 4 லட்சத்து 63 ஆயிரம் விவசாயிகள் நேரடியாக பயனடைந்துள்ளனர். கொள்முதல் செய்யாமல் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதாக வந்த தகவலில் உண்மையில்லை. லாப நோக்கில் இடைத்தரகர்கள் சிலர் வேண்டுமென்றே தவறான தகவல்களை பரப்புகிறார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கடந்த 30 வருடங்களுக்கு முன்பு கொண்டுவரப்பட்ட கல்விக் கொள்கையில், தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாற்றம் குறித்து தமிழ்நாடு அரசு திடீரென எதையும் அறிவிக்க முடியாது. புதிய கல்விக் கொள்கை பற்றி ஆய்வு செய்து அதனடிப்படையில் முடிவு அறிவிக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க:5 மாதங்களுக்கு பிறகு உற்பத்தியை தொடங்கியுள்ள பெரியாறு நீர் மின்நிலையம்!

ABOUT THE AUTHOR

...view details