தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘அதிமுகவை எவராலும் வீழ்த்த முடியாது’-அமைச்சர் காமராஜ்! - அமைச்சர் காமராஜ்

திருவாரூர்: நன்னிலம் அருகே வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்நாடு உணவுத் துறை அமைச்சர் காமராஜ், “அதிமுகவை எவராலும் வீழ்த்த முடியாது, எதிர்க்கட்சிகளின் கனவு ஒரு போதும் பலிக்காது” எனக் கூறினார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் காமராஜ்
செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் காமராஜ்

By

Published : Nov 28, 2020, 8:01 AM IST

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேவுள்ள தனியார் திருமண மண்டபத்தில், வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆலோசனை கூட்டமானது தமிழ்நாடு உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைப்பெற்றது.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் காமராஜ் வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்து அவர், “சாதாரண மக்களை அச்சமில்லாமல் பாதுகாக்கின்ற கட்சி, ஆட்சியாக அதிமுக செயல்பட்டு வருகிறது.

முதலமைச்சர் தலைமையில் துணை முதலமைச்சர் வழிகாட்டுதலில் மிக சிறப்பாக பணியாற்ற கூடிய அதிமுக இயக்கம் மூன்றாவது முறையாக 2021 ஆம் ஆண்டும் அதிமுக தான் ஆட்சி அமைக்கும், மக்களும் அதைத்தான் விரும்புகிறார்கள்.

அதிமுகவை எவராலும் வீழ்த்த முடியாது, எதிர்க்கட்சிகளின் பகல் கனவு ஒரு போதும் பலிக்காது. அதிமுக அமைச்சர்களின் பேட்டிகளில் மட்டுமல்ல அவர்களுடன் போட்டிபோட்டு வேலை செய்வதிலும் யாரும் கிடையாது” என்றார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் காமராஜ்

மேலும், மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் குறித்த கேள்விக்கு, “கரோனா நேரத்தில் அவரை காணவில்லை, அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. நாங்கள் கரோனா நேரத்திலும் கூட கரோனாவுடன் போராடிக் கொண்டிருக்கின்றோம். அவரைப் பற்றி பேசுவதற்கு எங்களுக்கு நேரமில்லை” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்': அமைச்சர் செங்கோட்டையன்!

ABOUT THE AUTHOR

...view details