திருவாரூர் மாவட்ட அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான செயல்வீரர்கள் கூட்டம் இன்று தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திருவாரூர் அதிமுக மாவட்ட செயலாளரும், உணவுத் துறை அமைச்சருமான காமராஜ் தலைமையேற்றார்.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் காமராஜ், "அதிமுகவை அழிக்க நினைப்பவர்கள் சூனியக்காரர்கள். சூனியக்காரர்கள் வெற்றி பெற்றதாக வரலாறே கிடையாது. அதிமுக ஆட்சியால்தான் சாதாரண மக்களுக்கு வாழ்க்கை கிடைக்கிறது. தமிழ்நாடு எந்தவித பிரச்னையும் இல்லாமல் அமைதிப் பூங்காவாகதான் இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு வேண்டுமென்றால், தான் முதலமைச்சராக முடியவில்லையே என்ற பிரச்னை இருக்கலாம்.