திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகேவுள்ள மருதுவாஞ்சேரி பகுதியில் மகளிர் குழுக்களுக்கு வங்கி கடன் வழங்கும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறியதாவது, “திருவாரூர் மாவட்டத்தில் 9ஆயிரத்து 700 மகளிர் குழுக்களுக்கு ஆயிரம் கோடி ரூபாய் அளவில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இதனால், திருவாரூர் மாவட்டத்தில் கந்து வட்டி ஒழிக்கப்பட்டு, அதிலிருந்து மக்கள் மீண்டு வந்துள்ளனர்.
கமல்ஹாசன் குறித்த கேள்வி:
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என நடிகர் கமல்ஹாசன் கூறுவது நகைச்சுவையாக உள்ளது. தற்போது நடைபெறுவது பெண்களின் அரசு, பெண்களின் ஆட்சி நடிகர் கமல்ஹாசன் சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறார்.
செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் காமராஜ் திமுக குறித்த கேள்வி:
திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்த வழக்கை நாங்கள் நீதிமன்றத்தில் சந்திக்க தயாராகவுள்ளோம். ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் தொகுப்பிற்கான டோக்கன்கள், ரேஷன் கடை ஊழியர்களால் வழங்கப்படுகிறது, அதிமுகவினரால் வழங்கவில்லை. திமுக நடத்திவரும் கிராமசபை கூட்டங்களை கண்டு அதிமுகவிற்கு எந்தவித அச்சமும் இல்லை” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சிஸ்டம் சரியில்லை என்றது அதிமுகவை அல்ல- அமைச்சர் ஜெயக்குமார்