கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடமாடும் மலிவு விலை காய்கறி விற்பனை வாகனத்தை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு இலவச அரிசி, காய்கறிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால் மே மாதத்திற்கான அரிசி, சர்க்கரை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருள்கள் நியாய விலைக் கடையில் வழங்கப்படும். திருவாரூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை இதுவரை 16 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அதில், ஏழு பேர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
விவசாயக் கடன் குறித்து பலரும் பல கருத்தை கூறிவருகிறார்கள். இது விவசாயிகளை பாதுகாக்கும் அரசாக செயல்படுகிறது. இந்த ஊரடங்கின்போது விவசாயப் பணிகள் செய்ய தடைவிதிக்கவில்லை. விவசாயப் பொருள்களை சந்தைக்கு எடுத்துச் செல்ல தடையில்லை, கொள்முதல் செய்யவும் தடையில்லை.