தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நம்முடைய பொருளாதாரம் அண்டை மாநிலங்களுக்குச் சென்றுவிடக் கூடாது - அமைச்சர் காமராஜ்! - அமைச்சர் காமராஜ் செய்தியாளர் சந்திப்பு

திருவாரூர்: நம்முடைய பொருளாதாரம் அண்டை மாநிலங்களுக்குச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக தமிழ்நாட்டில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

Food Minister Kamaraj  அமைச்சர் காமராஜ்  உணவுத்துறை அமைச்சர் காமராஜ்  அமைச்சர் காமராஜ் செய்தியாளர் சந்திப்பு  Minister Kamaraj Press Meet
Minister Kamaraj Press Meet

By

Published : May 8, 2020, 9:46 AM IST

திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் குடும்பங்களுக்கு மாவட்ட அதிமுக சார்பில் அரிசி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் பொதுமக்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று இலவசமாக வழங்கும் நிகழ்வை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், " நியாய விலைக் கடைகள் மூலமாக மே மாதத்திற்கான இலவச பொருள்கள் 41 விழுக்காடு வழங்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்பட்டு அதற்கான தொகை மாவட்ட ஆட்சியரிடம் செலுத்தப்பட்டு வருகிறது.

ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மதுபானக் கடைகள் திறந்துவிட்டன. இதனால், நம்முடைய பொருளாதாரம் அண்டை மாநிலங்களுக்கு சென்று விடும் நிலை ஏற்பட்டதால் மட்டுமே தமிழ்நாட்டில் மதுக்கடையை திறக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

மேலும் மருத்துவத்திற்கு தேவையான அனைத்து வசதிகளும் தங்கவைக்க இடங்கள் தயார் நிலையில் உள்ளன. சிறிய அறிகுறிகள் உள்ளவர்கள் வீட்டிலேயே தங்களைக் கவனித்துக் கொள்ளுமாறு முதலமைச்சர் கூறியதை சிலர் வேண்டுமென்றே அவதூறாக பரப்பி வருகின்றனர்" எனக் கூறினார்.

இதையும் படிங்க:மெட்ரிக் பள்ளிகளுக்கு கடன் வழங்க கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details