திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் முன்பு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பாஸ்கர் முன்னிலையில் திமுக மற்றும் பிற கட்சிகளைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்டவர்கள் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காமராஜ், "அதிமுகவிற்கு இனி வளர்பிறை தான். அதற்கு தேய்வு என்பதே கிடையாது. எட்டரை ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் எந்த இயக்கத்திற்கும் கிடைத்திடாத வெற்றி அதிமுகவிற்கு கிடைத்திருக்கிறது. வருகின்ற 21ஆம் தேதி காலை 10 மணிக்கு தஞ்சாவூாில் மூன்று மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் விவசாயிகள் கருத்து கேட்புக்கூட்டம் நடைபெறும்.