தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீர், மோர் பந்தலைத் திறந்துவைத்த அமைச்சர் காமராஜ் - thiruvarur latest news

திருவாரூர்: அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர், மோர் பந்தலை உணவுத் துறை அமைச்சர் காமராஜ் திறந்துவைத்தார்.

நீர்,மோர் பந்தலை திறந்து வைத்த அமைச்சர் காமராஜ்
நீர்,மோர் பந்தலை திறந்து வைத்த அமைச்சர் காமராஜ்

By

Published : Apr 16, 2021, 7:20 PM IST

கோடைகாலம் தொடங்கியுள்ளதால் வெயிலுடன்கூடிய அனல் காற்று வீசிவருகிறது. இதனால் வீட்டைவிட்டு வெளியே வர முடியாமல் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

பொதுமக்களின் தாகத்தைத் தணிக்க அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் நீர், மோர் பந்தல்களைத் திறக்க வேண்டும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சில நாள்களுக்கு முன்னர் கோரிக்கைவிடுத்திருந்தனர்.

நீர்,மோர் பந்தலை திறந்து வைத்த அமைச்சர் காமராஜ்

இதனையடுத்து தற்போது குடவாசல் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள நீர், மோர் பந்தலை அமைச்சர் காமராஜ் திறந்துவைத்தார். உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய நீர், மோர், தர்பூசணி, வெள்ளரிக்காய், இளநீர் உள்ளிட்டவை பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட்டன. இதில் ஐம்பதுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க : கிரிஜா வைத்தியநாதன் வழக்கு ஏப். 19-க்கு ஒத்திவைப்பு

ABOUT THE AUTHOR

...view details