தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘கரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக திருவாரூர் உருவாகும்’- அமைச்சர் காமராஜ்! - நியாயவிலைக் கடை ஊழியர்களுக்கான கரோனா மருத்துவ முகாம்

திருவாரூர்: கரோனா இல்லாத மாவட்டமாகவும், பச்சை நிற மண்டலமாகவும் திருவாரூர் மாறும் என உணவுத் துறை அமைச்சர் காமராஜ் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

உணவுத் துறை அமைச்சர் காமராஜ்
உணவுத் துறை அமைச்சர் காமராஜ்

By

Published : May 16, 2020, 4:00 PM IST


திருவாரூர் மாவட்டம் குளித்தலை தொகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு கரோனா பரிசோதனை முகாமை தமிழ்நாடு உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆனந்த், மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் விஜயக்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கூறியதாவது, “தமிழ்நாட்டில் கரோனா தாக்கத்தின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் நோயின் வீரியம் குறைந்து கொண்டுவருகிறது. உதாரணமாக திருவாரூர் மாவட்டத்தில் 32 பேர் கரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தனர். ஆனால், தற்போது 29 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஓரிரு நாள்களில் மீதமுள்ள மூன்று பேரும் குணமடைந்து வீடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவிலேயே திருவாரூர் மாவட்டம் கரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக உருவாகும். வல்லுநர்களின் தலைமையில் ஆலோசனை, ஆய்வுக் கூட்டங்களை நடத்தி தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக கரோனா பாதிப்பு தமிழ்நாட்டில் குறைவாக உள்ளது.

ஜூன் மாதத்திற்கான நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருள்கள் 82 விழுக்காடு சேர்ந்துவிட்டது. பொதுமக்கள் எந்தவித பிரச்னையுமின்றி தகுந்த இடைவெளியைக் கடைபிடித்து பொருள்களை வாங்கி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் பணியாற்றும் 30 ஆயிரத்து 600 நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு கரோனா தொற்று உள்ளதா என கண்டறியும் கரோனா பரிசோதனை முகாம்கள் இன்று முதல் தொடங்குகிறது” எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details