திருவாரூர் மாவட்டத்தில் அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனு பெறும் நிகழ்ச்சி அதிமுக மாவட்ட செயலாளரும் உணவு துறை அமைச்சருமான காமராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கு விண்ணப்ப படிவத்தினை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் காமராஜ், தமிழ்நாடு துணைத் தேர்தல் செயலாளர் மாற்றப்பட்டது தொடர்பாக ஸ்டாலின் கூறிய கருத்துக்கு, "வேண்டாத பொண்டாட்டிக்கு கை பட்டா குத்தம், கால் பட்டா குத்தம் என்பதுபோல நாங்கள் அவருக்கு வேண்டாதவர்களாக இருக்கிறோம்" என்ற வகையில் எதுகை மோனையில் பதிலளித்தார்.
விருப்பமனுவை வழங்கிய அமைச்சர் தொடர்ந்து பேசுகையில், "அதிமுக ஆட்சியில் இருப்பதை ஒரு நாள்கூட அவர் விரும்புவது கிடையாது. ஆக்கப்பூர்வமான கருத்துகளை எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின் சொல்லுவதும் கிடையாது. எப்படியாவது அதிமுகவை தமிழ்நாட்டிலிருந்து அழித்துவிட வேண்டும் என்பது போலத்தான் அவருடைய செயல்பாடுகள் இருக்கிறது. உள்ளாட்ச்சி தேர்தலை தள்ளி போடுவதற்கான அவசியம் அதிமுகவிற்கு இல்லை, தேர்தலை சந்திக்க அதிமுக 100 விழுக்காடு தயாராகவுள்ளது.
ஸ்டாலினுக்கு கால் பட்ட குத்தம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பற்றி பேசுவதற்கு கமல் ஹாசனுக்கு எந்தவித அடிப்படை தகுதியும் கிடையாது. எதை வேண்டுமானாலும் பேசலாம் யார் வேண்டுமானாலும் பேசலாம் என்பது வரலாற்றில் மிகப்பெரிய குற்றமாகிவிடும் அதையெல்லாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்" என எச்சரித்தார்.