தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'முதலமைச்சர் பச்சை துண்டுக்கு உரிமையானவர்' - அமைச்சர் பதிலடி! - திருவாரூர் ஜெயலலிதா பிறந்தநாள்

திருவாரூர்: முதலமைச்சர் பழனிசாமி பச்சை துண்டுக்கு உரிமையான தலைவர் எனக் கூறி முன்னாள் திமுக அமைச்சர் நேருவிற்கு அமைச்சர் காமராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.

minister kamaraj in thiruvarur jayalalaithaa birthday celebration
அமைச்சர் காமராஜ்

By

Published : Feb 26, 2020, 9:31 AM IST

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாள் விழா திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கலந்துகொண்டார்.

அப்போது அவர், 'முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பச்சைத் துண்டு போட்டுக் கொண்டு, மக்களை விவசாயி என்று ஏமாற்றி வருகிறார் என முன்னாள் திமுக அமைச்சர் நேரு கூறினார். ஆனால், முதலமைச்சர் பச்சை துண்டுக்கு உரிமையானத் தலைவர்; கம்பீரமானத் தலைவர்' என்று முன்னாள் திமுக அமைச்சர் நேருவிற்குப் பதிலடி கொடுத்துள்ளார்.

ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாள் விழா

மேலும் 'ஜெயலலிதா எதிர்த்து வந்த ஹைட்ரோகார்பன் திட்டத்தை தடைபோடும்விதமாக டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது வரலாற்று சிறப்புமிக்க செய்தியாகும்' எனத் தெரிவித்தார்.

வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி மேலும் தொடரும் எனவும்; இதுவே மக்களின் கனவாக உள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

இதனையடுத்து திமுகவில் இருந்து விலகி நூற்றுக்கும் மேற்பட்டோர் அமைச்சர் காமராஜ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் கோபால், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திமுகவில் இருந்து விலகி நூற்றுக்கும் மேற்பட்டோர் அமைச்சர் காமராஜ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

இதையும் படிங்க:அமைச்சர் வேலுமணி மீதான வழக்கில் முடிவெடுக்கக்கூடாது - லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தடை!

ABOUT THE AUTHOR

...view details