தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

என் உயிருள்ளவரை நன்னிலம் தொகுதிக்காக உழைப்பேன் - அமைச்சர் காமராஜ் - Minister Kamaraj Vote Collecting

என்னுடைய பரம்பரையே நன்னிலம் தொகுதி மக்களுக்காக உழைப்பேன் என்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட உணவுத்துறை அமைச்சரும் நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளருமான காமராஜ் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் காமராஜ் தேர்தல் பரப்புரை  அமைச்சர் காமராஜ்  அமைச்சர் காமராஜ் வாக்கு சேகரிப்பு  நன்னிலம் அதிமுக வேட்பாளர் காமராஜ்  Minister Kamaraj election campaign  Minister Kamaraj  ADMK candidate Kamaraj from Nannilam constituency  Minister Kamaraj Vote Collecting  Minister Kamaraj election campaign Nannilam constituency
Minister Kamaraj Vote Collecting

By

Published : Mar 26, 2021, 4:47 PM IST

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஆர். காமராஜ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, இன்று (மார்ச் 26) நன்னிலம் அருகே சூரக்குடி உள்ள மாரியம்மனை வழிபட்டு மேள தாளங்கள் முழங்க பனங்குடி, ஆண்டிபந்தல், சுரக்குடி , திருக்கண்டீஸ்வரம், உள்ளிட்ட பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசுகையில், "என் உயிருள்ளவரை நன்னிலம் தொகுதி மக்களுக்காக உழைப்பபேன். அதேபோல், என்னுடைய பரம்பரையும் சந்நதியினரும் என் தொகுதி மக்களுக்காக உழைப்பார்கள். நீங்கள் செய்த வழிபாடுகளால் தான் நான் உயிர் பெற்று வந்து மீண்டும் உங்கள் முன்னால் பேசிக் கொண்டிருக்கிறேன்.

அமைச்சர் காமராஜ் தேர்தல் பரப்புரை

கடந்த 10 ஆண்டுகள் உங்களையே சுற்றி சுற்றி வந்துள்ளேன். பொது மக்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொடுத்துள்ளேன். பள்ளிகளை தரம் உயர்த்தியும் கல்லூரிகளை அமைத்துக் கொடுத்தும் சாலைகள் பாலங்கள் உள்ளிட்டவைகளும் கட்டிக் கொடுத்துள்ளேன். ஒவ்வொரு பகுதிக்கும் என்ன வேண்டும் என கேட்டு கேட்டு செய்துள்ளேன்" எனக் கூறினார்.

இதையும் படிங்க:பரப்புரை செல்லும் இடமெல்லாம் அமைச்சர் கண்ணீர்

ABOUT THE AUTHOR

...view details