தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதுச்சேரியில், எம்.ஜி.ஆர். சிலை அவமதிப்பு - அமைச்சர் காமராஜ் கண்டனம் - minister kamaraj condemned saffron piece dressing

திருவாரூர்: புதுச்சேரியில் எம்.ஜி.ஆர். சிலைக்கு காவி துண்டு அணிவித்ததற்கு அமைச்சர் காமராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

எம்.ஜி.ஆர். சிலைக்கு காவி துண்டு அணிவித்ததற்கு அமைச்சர் கண்டனம்
எம்.ஜி.ஆர். சிலைக்கு காவி துண்டு அணிவித்ததற்கு அமைச்சர் கண்டனம்

By

Published : Jul 24, 2020, 3:34 PM IST

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள மேனாங்குடியில் ஏழை- எளிய மக்களுக்கு நாட்டு கோழிக் குஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கோழி குஞ்சுகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசுகையில், "கறவை மாடுகள், கோழிக் குஞ்சுகள், நாட்டு ஆடுகள் வழங்குதல் போன்றவை கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் திட்டங்களாகும். பெண்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக மறைந்த முதலமைச்சர் தொடங்கிய இதுபோன்ற திட்டங்களை, தற்போதைய முதலமைச்சர் பழனிசாமி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

புதுச்சேரியில், எம்.ஜி.ஆர். சிலை அவமதிப்புக்கு அமைச்சர் கண்டனம்
திமுக தலைவர் ஸ்டாலின் கூறுவதுபோல, கரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து காட்ட வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை.
இறப்பில் விடுபட்டவர்களை கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் 444 பேர் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரின் சிலைக்கு காவி துண்டு போர்த்தப்பட்ட செயல் கடும் கண்டனத்துக்குரியது. இச்செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" எனத் தெரிவித்தார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details