தமிழகத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி நடக்க உள்ளது. தேர்தல் நெருங்கி வருவதையொட்டி பல்வேறு கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து அந்தந்த கட்சித் தலைவர்களும் கூட்டணி கட்சித் தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொண்டர் படையுடன் சென்று வாக்கு சேகரித்த அமைச்சர் காமராஜ் - உதவிதொகை ரூ 2000
திருவாரூர்: அமைச்சர் காமராஜுடன், 100க்கும் மேற்பட்ட கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அதிமுக சார்பில் போட்டியிடும் திருவாரூர் சட்டமன்ற வேட்பாளர் ஜீவானந்தம் மற்றும் நாகப்பட்டினம் நாடாளுமன்ற வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவாக நாங்கரை, குளிக்கரை, தேவர்கண்டநல்லூர் ஆகிய பகுதிகளில் வாகனத்தில் சென்று பரப்புரையில் ஈடுபட்டனர்.
இதில், 100க்கும் மேற்பட்ட கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள், இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்றனர். அமைச்சர் காமராஜ் கூறியதாவது, "ஏழைகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகயான 2000 ரூபாயை தேர்தல் நடத்தை விதிமுறைகளால் வழங்க இயலவில்லை. தேர்தல் முடிவுக்கு பின்னர் உதவி தொகையானது வழங்கப்படும். மேலும், பல்வேறு நலத்திட்டங்களை மக்கள் பெற்றிட இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்" என்றார்.