தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நாங்க பாடம் படிச்சிட்டோம்... நீங்கதான் படிக்கனும்' - மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் அறிவுரை - உணவுத்துறை அமைச்சர் காமராஜ்

மக்கள் பணி எப்படி ஆற்றவேண்டும் என்பதை நாங்கள் மக்களிடம் பாடம் படித்துவிட்டோம், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்தான் தற்போது பாடம் கற்கவேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

minister kamaraj advice to mk stalin
'நாங்க பாடம் படிச்சீட்டோம்... இப்ப நீங்கதான் படிக்கனும்' - மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் அட்வைஸ்

By

Published : Nov 27, 2020, 4:50 PM IST

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிதாக ஆறு 108 ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவையை கொடியசைத்து அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திருவாரூர் மாவட்டம் முழுவதும் 17 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயங்கிக் கொண்டிருந்தன. தற்போது, கூடுதலாக இரண்டு வாகனங்கள் பெறப்பட்டு ஏற்கனவே இருந்த நான்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் பழுது பார்க்கப்பட்டு தற்போது 23 ஆம்புலன்ஸ் சேவைகள் கிராமப்புற மக்களுக்காக தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்த அமைச்சர்

பாடம் கற்றுக்கொள்ள வேண்டியது திமுக தலைவர் ஸ்டாலின்தானே தவிர நாங்கள் இல்லை. நாங்கள் மக்களிடம் நல்ல பாடம் கற்றுள்ளோம். மக்கள் பணி எப்படி செய்யவேண்டும் என்கிற பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளனர். மக்களிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டியது திமுக தலைவர் ஸ்டாலின் தான்.

'நாங்க பாடம் படிச்சீட்டோம்... இப்ப நீங்கதான் படிக்கனும்' - மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் அட்வைஸ்
திருவாரூர் மாவட்டம் முழுவதும் 882 முகாம்கள் முகாம்களில் 15,548 குடும்பத்தினர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டன. முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு முதலமைச்சர் அறிவித்த 10 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு , ஒரு கிலோ எண்ணெய் உள்ளிட்டவை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழை நேரத்தில் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு பாதிப்புக்கு ஏற்ப உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க:புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிய அமைச்சர் கே.சி. வீரமணி

ABOUT THE AUTHOR

...view details