திருவாரூர்: மன்னார்குடி இராஜகோபாலசுவாமி திருக்கோயிலில் அமைச்சர் கே. சேகர்பாபு இன்று (ஜூலை 10) பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார்.
ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சேகர்பாபு, "முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற நாளிலிருந்து தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரம் மேம்பட பல்வேறு திட்டங்களைத் தீட்டி செயல்படுத்திவருகிறார்.
அனைத்துத் துறைகளையும் சிறப்பாக முடுக்கிவிட்டு மக்களுக்கான அடிப்படைத் தேவைகளையும், திட்டங்களையும் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தினர்.
இதன்பேரில் இந்து சமயம் மற்றும் அறநிலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்கள், கல்லூரிகள், பள்ளிகள் ஆகியவற்றில் நேரடியாகப் பார்வையிட்டு செப்பனிட வேண்டிய திருக்கோயில்களைச் செப்பனிடுவது குறித்தும் பள்ளி, கல்லூரிகளை தரம் உயர்த்துவது உள்ளிட்ட ஆலோசனைகளையும், குறைகளையும் கேட்டறிந்துவருகிறோம்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மேலும், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றித் தந்து தரமான கல்வி வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" எனக் கூறினார். விரைவில் குடமுழுக்குப் பணிகள் இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கண்ணன், திருவாரூர் சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கே. கலைவாணன், மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.