திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அவளிவநல்லூர் கிராமத்தில் உள்ள குளம் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டு வருகிறது. இந்த பணிகளை அமைச்சர் காமராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் காமராஜ் கூறியதாவது, “கிராமப் பகுதிகளில் தூர்வாரப்படாத குளங்கள் தூர்வார வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தால், அந்த குளங்கள் சிறப்பு திட்டத்தின் கீழ் தூர்வாரப்படும். மேலும் மக்கள் விரும்புகின்ற திட்டங்களை தான் தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் என்றார்.