திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மகாதேவபட்டினம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தி என்ற பெண்ணும், எட அன்னவாசல் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்ற இளைஞரும் ஆறு மாதமாக காதலித்துவந்தனர். ஆனந்தியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
இதனால் அந்த பெண் தற்போது 5 மாதம் கர்ப்பமாகியுள்ளார். இது குறித்து ராஜேஷ் குடும்பத்தாரிடம் ஆனந்தியின் பெற்றோர் திருமணம் செய்து வைப்பது குறித்து பேசியுள்ளனர். ஆனந்தியை திருமணம் செய்துகொள்ளாமல் காலம் கடத்தி வந்ததும், ஆனந்தியுடன் பேசுவதையும் ராஜேஷ் நிறுத்திக்கொண்டார்.
இந்நிலையில் திருமணம் குறித்து பேசினால் கொலை செய்து விடுவதாகவும் ராஜேஷ் குடும்பத்தினர் ஆனந்தியை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஆனந்தியின் பெற்றோர் மன்னார்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 24ஆம் தேதி புகார் அளித்தனர்.
பெண்ணின் குடும்பத்தினர் குற்றச்சாட்டு எனினும் காவலர்கள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில், “குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக காவல்துறையினர் செயல்படுவதாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை” என பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் குற்றம் சாட்டினார்.
இதையும் படிக்க: நிர்வாணமாக திருட முயற்சித்த இளைஞர் - பகீர் சிசிடிவி காட்சி!