திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள குடும்பங்களுக்கு உதவிடும் வகையில், அனைத்து சேவை சங்கங்கள், பொதுநல அமைப்புகளை ஒருங்கிணைத்து, மன்னார்குடியில் செயல்படும் நேசக்கரம் சார்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் கணவனால் கைவிடப்பட்டு, தனது குடும்பத்தை நடத்திவரும் பெண்கள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகளை வைத்துக்கொண்டு பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குடும்பத்தினர் உள்ளிட்ட 100 குடும்பங்களுக்கு 15 நாள்களுக்குத் தேவையான மளிகைப் பொருள், அரிசி, ஒரு வாரத்திற்குத் தேவையான காய்கறிகள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினர்.